கணவனை கொன்ற தவெக பெண் நிர்வாகி

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரவுடி புதூர் மணிகண்டன் என்ற சுரேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக அவரது மனைவியான தவெக மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கொலை என அடுத்தடுத்து தவெக நிர்வாகிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிக்கி வருவதால், அளுங்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕