பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்.. அதிர்ச்சி சம்பவம்

சென்னை ஈஞ்சாம்பாக்கத்தில் பிறந்து 43 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை, பெற்ற தாயே கொலை செய்துள்ளார். இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் தாய் பாரதி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, வீட்டின் அருகேயுள்ள காலி மனையில் குழந்தை வீசப்பட்டிருந்தது அம்பலமானது. ஒரு பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த தாய், கட்டைப் பையில் வைத்து மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்றது தெரியவந்துள்ளது.

நன்றி: kumudamNews24x7

தொடர்புடைய செய்தி