கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் பணிபுரிந்த பெண் ஊழியரை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவானவர் 4 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். வயநாட்டைச் சேர்ந்த ஹாரிஸ் (40) என்பவரை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர். 2021ல் திருமணம் செய்து கொள்வதாக கூறி கேன்டீனில் உள்ள கழிவறையில் அப்பெண்ணை உடை மாற்ற வைத்துள்ளார். பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்துக் கொண்டு மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்து தலைமறைவானார். போலீசார் தற்போது அவரை கைது செய்தனர்.