கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் தோல்ஷாப் என்னும் பகுதி உள்ளது. அங்கு சாலையில் திரிந்த மாடு ஒன்று இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை முட்டி தள்ளியது. இதில் நிலைதடுமாறிய அவர்கள் இருசக்கர வாகனத்துடன் சாலையின் ஓரத்தில் விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
நன்றி: தினகரன்