தூத்துக்குடி அருகே, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிவா (56) தனது காரில் லதா (43), கலா (54), ராஜேஸ்வரி (33), சுபேதன் (22) மற்றும் விஜயா (48) ஆகியோருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழாவிற்காக சென்றுள்ளார். அப்போது, எதிரே வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த 6 பேரும் பலத்த காயமடைந்தனர். விபத்துக்குப் பிறகு லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.