19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த சக தோழி

மேற்குவங்கத்தின் சுந்தரபன்ஸ் பகுதியில் இளம்பெண்கள் இருவர் இந்து முறைப்படி கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். நடனக்கலைஞர்களான ரியா (19), ராக்கி (20) ஆகியோர் நீண்ட காலமாக தன்பாலின காதல் உறவில் இருந்துள்ளனர். இந்த நிலையில், அண்மையில் இருவரும் திருமணம் செய்த நிலையில், கிராம மக்கள் அவர்களை கொண்டாடி, வாழ்த்து தெரிவித்தனர். ஆரம்பத்தில் குடும்பத்தினர் எதிர்த்த போதும், தற்போது அவர்களும் சம்மதம் தெரிவித்ததால் எளிமையாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

தொடர்புடைய செய்தி