பள்ளியிலேயே மாணவிக்கு பிறந்த குழந்தை.. ஆசிரியர்கள் அதிர்ச்சி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிதாம்பூரில் தனியார் பள்ளியில் கணித தேர்வு எழுதி கொண்டிருந்த 10ஆம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தேர்வுக்கு இடையே கழிப்பறைக்குச் சென்ற மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. மேலும், கழிப்பறையில் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. உடனே அங்கு விரைந்த ஆசிரியர்கள், மாணவியையும், குழந்தையையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி