கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் சோமந்தட்கா கிராமத்தில் 10 வயது சிறுமி, கடையில் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டில் இருந்து சாப்பிடும்போது அதற்குள் எரிந்து கருகிய பாம்பின் உடல் இருந்தது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் சிறுமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர். சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.