புதுமண தம்பதிக்கு ஒரு லட்சம் மதிப்பிலான பணம் மாலை.. வைரல் வீடியோ

ராமநாதபுரம் மாவட்டத்தில், திருமணம் முடிந்து வெளியில் வந்த தம்பதியினருக்கு, தம்பதியினரின் தாய் மாமன்கள் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான கரன்சி நோட்டுகளை மாலையாக தொடுத்துள்ளனர். மேலும், மணமகளுக்கும் மணமகனுக்கும் அணிவித்து வரவேற்ற விதம் பார்வையாளர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெரும் விதமாக அமைந்தது.  பூக்களால் ஆன மணமாலையோடு கரன்சியாலான பண மாலையும் அணிவித்துக்கொண்டு ஊர்வலமாக வந்த மணமக்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி