இடித்து தூக்கிய கார்.. தூய்மைப் பணியாளர் பலி

சென்னை தாம்பரம் அருகே, சாலையில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று மோதிய விபத்தில், பெண் தூய்மைப் பணியாளர் உயிரிழந்தார். தாம்பரம் மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தவர் ராணி (28). இவர், சேலையூரில் சக பணியாளர்களுடன் கடந்த 27ஆம் தேதி நள்ளிரவு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது கார் மோதியது. படுகாயங்களுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ராணி உயிரிழந்தார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி