ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள குலுவின் நிர்மந்த் பிளாக், மலானா, மண்டி மற்றும் சிம்லா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், வீடுகள், பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்டவைகள் சேதமடைந்தன. இந்த மழையால் மாநிலத்தில் உள்ள பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் ஒரு பெரிய கட்டிடம் இடிந்து பார்வதி ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இது குறித்து வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.