புதுக்கோட்டை மாவட்டத்தில், ஜல்லிக்கட்டை பார்வையிடும்போது எதிர்பாராத விதமாக காளை முட்டியதில் படுகாயம் அடைந்த சிறுவன் சின்னையா (17) இன்று (பிப்.7) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். குலமங்களம் மலையக் கோவிலில் கடந்த 2ஆம் தேதி நடந்த ஜல்லிக்கட்டில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த சின்னையாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.