ஷூவுக்குள் இருந்து படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு

கடலூர்: சாவடி பகுதியில் உள்ள தமிழ் என்பவரின் வீட்டில், ஷூவுக்குள் ஒளிந்திருந்த நல்ல பாம்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட வீட்டு உரிமையாளர் வன ஆர்வலர் செல்லாவை தொடர்புகொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த செல்லா பாம்பினை பிடிக்க முயன்ற போது, அது படம் எடுத்து ஆடியது. பின்னர், அந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்த அவர், அதை பாதுகாப்பாக காப்புக்காட்டில் விட்டார். கடந்த 2 நாட்களில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டிருப்பது அங்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி