திருமண நாளில் ரத்த வெள்ளத்தில் கோர மரணம்

கடலூர்: லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர் சென்னையை சேர்ந்த தாமஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். திருமண நாளில் மனைவியுடன் வேளாங்கண்ணி ஆலயம் சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. சாலை பணி காரணமாக நான்கு வழிச்சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்ட நிலையில் உரிய அறிவிப்பு பலகை வைக்கப்படாததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி