திருநெல்வேலி மாவட்டத்தில், தெருவில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீது அதிவேகமாக பைக் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலப்பாளையம் பகுதியில் குறுகிய தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், திடீரென சாலையில் ஓடியுள்ளார். அப்போது அங்கு சென்ற பைக் ஒன்று சிறுவன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுவன் சாலையிலேயே சுருண்டு விழுந்தார். உடனடியாக சிறுவனை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
நன்றி: குமுதம்