10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் குடித்த 6 வயது சிறுமி பலி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தை கடையில் விற்கும் 10 ரூபாய் மதிப்பிலான கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்துள்ளது. பின்னர் சிறிது நேரத்திலேயே வாயில் நுரை தள்ளி உயிரிழந்துள்ளது. தங்கள் குழந்தையை பறிகொடுத்துவிட்டு அந்த தாயும் தந்தையும் மனமுடைந்து காணப்படுவது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. மேலும் இது போன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் தந்தை கோரிக்கை வைத்துள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி