பள்ளி விடுதியில் 9ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதி செயல்பட்டு வருகிறது. அங்கு பயின்று வந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி இன்று (பிப்.,7) திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விடுதிக்குச் சென்று, ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மாணவியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை குறித்து பள்ளி விடுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி