தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 20) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 94.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவிகள் 96.47% மற்றும் 92.15% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்ப் பாடத்தில் 98.43%, ஆங்கிலத்தில் 99.44%, கணிதத்தில் 97.36%, அறிவியலில் 98.00%, சமூக அறிவியலில் 97.93% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.