சென்னை மெட்ரோவில் ஜூன் மாதத்தில் 92.19 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூன் மாதத்தில் 92.19 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 92,19,925 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக ஜூன் 27 அன்று 3,72,503 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், பயண அட்டைகளை பயன்படுத்தி மட்டும் 44,03,575 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி