இந்தி மொழி பாடத்தில் 90,000 பேர் தோல்வி

ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியில், கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மூன்றாம் மொழிப் பாடமாக, தேர்ந்தெடுத்த இந்தியில் தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்மொழி கொள்கையை திணிப்பதால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கர்நாடகாவில் ஆறாம் வகுப்பு முதல், மூன்றாம் மொழியாக இந்தியை படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி