மத்திய கிழக்குப் போர் தொடர்பான AI வீடியோக்களுக்கு முறையான 'ஏஐ லேபிள்' இடுவது கட்டாயம் என X தளம் அறிவித்துள்ளது. இந்தத் தகவலைக் குறிப்பிடாமல் வீடியோக்களைப் பதிவிடும் பயனர்கள், 90 நாட்களுக்கு வருவாய் பகிர்வு திட்டத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என அதன் தயாரிப்புத் தலைவர் நிகிதா பீர் எச்சரித்துள்ளார். தொடர்ந்து விதிகளை மீறுபவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.