9 சிட்கோ புதிய தொழிற்பேட்டைகள் - எங்கெல்லாம் அமையவுள்ளது?

ரூ.366 கோடியில் 9 சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைய இருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார். காஞ்சிபுரம் - திருமுடிவாக்கம், விழுப்புரம் - சாரம் மற்றும் நாயக்கனூர், கரூர் - நாகம்பள்ளி, திருச்சி - சூரியூர், மதுரை - கருத்தபுளியம்பட்டி, ராமநாதபுரம் - தனிச்சியம், தஞ்சாவூர் - நடுவூர், திருநெல்வேலி - நரசிங்கநல்லூர் ஆகிய 9 இடங்களில் தொழிற்பேட்டைகள் அமையவுள்ளது. இதன் மூலம் 17,500 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

தொடர்புடைய செய்தி