தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 1.43 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், ரவுடிகள், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி: PT