லாரி மோதி 82 ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் தச்சங்குறிச்சி அருகே கரும்பு ஏற்றி வந்த லாரி மோதியதில் 82 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது. 250-க்கும் மேற்பட்ட ஆடுகளை நித்திஷ் சாலையில் ஓட்டிச் சென்றபோது, மதுபோதையில் வேகமாக லாரியை ஓட்டிவந்த நல்லத்தம்பி என்பவர் ஆடுகள் மீது ஏற்றியுள்ளார். இதில் 82 ஆடுகள் பலியான நிலையில், சில ஆடுகள் காயமடைந்துள்ளன. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி