உத்தரகாண்ட்டில் மதத்தின் போர்வையில் மக்களின் பொது நம்பிக்கையை சுரண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவுறுத்தினார். இதையடுத்து அங்கு கடந்த 10-ம் தேதி முதல் போலி சாமியார்களை கண்டுபிடிக்க 'ஆபரேஷன் காலனேமி' என்ற தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. இதன் மூலம் தற்போது வரை 82 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.