முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நாட்டின் 2வது தேசிய முதியோர் இல்லம் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 81,33,806 பேர் ரூ.5,878.85 கோடி காப்பீட்டுத் தொகையுடன் பயனடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதில், 25,80,867 பேர் ரூ.2,750.28 கோடி காப்பீடு செலவில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.