பொங்கல் சந்தையில் 8000 ஆடுகள் ரூ.7 கோடிக்கு விற்பனை

தர்மபுரி: நல்லம்பள்ளியில் நேற்று (ஜன., 13) நடைபெற்ற பொங்கல் சந்தையில், குலதெய்வ வழிபாட்டிற்காக ஆடுகளை வாங்கவும் விற்கவும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரத்தை விட ஆடுகளின் விலை உயர்ந்து, ஒரு நாள் விற்பனையில் சுமார் 8,000 ஆடுகள் ரூ. 7 கோடிக்கு விற்பனையாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி