டெல்லியில் 2026-ம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 54 பேர் காணாமல் போகும் நிலையில், மாயமானவர்களில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 235 பேரை மட்டுமே காவல்துறையினர் மீட்டுள்ள நிலையில், எஞ்சிய 572 பேரின் நிலை என்னவென்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது டதற்போது நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.