மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசு, தற்போது கடுமையான எபோலா வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. பொதுவாகக் காணப்படும் ‘ஜைர்' உருமாற்ற வைரஸை விட முற்றிலும் மாறுபட்ட, மிகவும் அரிதான ‘புந்திபுகியோ' வகை வைரஸ் மூலமே இந்த நோய் பரவுவதை சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பால், கிழக்கு இட்டுரி மாகாணத்தில் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.