திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் பைக்கில் வந்து தொடர் தாக்குதல்களில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் கூறுகையில், “பிரம்மதேசம், வாகைகுளம், நெட்டூர் பகுதிகளில் 6 பேரைத் தாக்கிவிட்டு கும்பல் தப்பிச் சென்றது. சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் படை களமிறக்கப்பட்டு இரு மாவட்டங்களிலும் தீவிர சோதனை நடந்தது. காவல் துறையின் தீவிர நடவடிக்கைகளால் 3 சிறார்கள் உட்பட மொத்தம் 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்” என விளக்கம் அளித்துள்ளனர்.