நேபாளத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி

நேபாளத்தில் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே 60 கி.மீ தொலைவில் உள்ள பனேபாபர்திபஸ் நெடுஞ்சாலையின் மலைப்பாதையில், பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 15 பேருக்கு அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி