PF சந்தாதாரர்களுக்கு 8.25% வட்டி விகிதம் - மத்திய அரசு அறிவிப்பு

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான (EPFO) 2025-26 நிதியாண்டுக்கான வட்டியை 8.25 சதவீதமாக அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வட்டி ஜூலை 15ஆம் தேதிக்குள் 34 கோடி EPFO கணக்குகளில் வரவு வைக்கப்படும். இதன் மூலம் 8 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களின் கணக்குகளில் பி.எப். சேமிப்புக்கான வட்டி செலுத்தப்பட உள்ளது. டெல்லியில் நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உயர்நிலை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ரூ.1 லட்சம் வைப்புக்கு ரூ.8,250 வட்டியாக கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி