டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஏற்கெனவே மருத்துவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், குண்டுவெடிப்பை நிகழ்த்திய உமர் நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக, ஃபரிதாபாத்தை சேர்ந்த செயிப் என்பவர் தற்போது 7-வது நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.