65 வயது மனைவியை அடித்துக்கொலை செய்த 77 வயது கணவர்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே 65 வயது மனைவியை அடித்து கொன்ற 77 வயது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியசாமி (77) மற்றும் அவரது மனைவி புஷ்பாத்தாள் (65) ஆகியோருக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். வழக்கம்போல சண்டையிட்டபோது, பெரியசாமி புஷ்பாத்தாளை அடித்துக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி