தற்போது ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் பலரும் அந்த ஸ்மார்ட் போனை நல்வழியில் பயன்படுத்தாமல் ஆபாச வீடியோக்களை பார்க்க பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பலர் சிறார் பாலியல் வீடியோக்களை பார்க்கின்றனர். அவ்வாறு பார்ப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது உறுதி. மேலும் ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். இந்த மாதிரியான வீடியோக்களை தேடுவதையும் நிறுத்திக்கொள்வது நல்லது.