வேலூர், காட்பாடி பகுதிகளில் நேற்று (பிப்., 16) நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவின் போது, அலங்கரிக்கப்பட்ட தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தேரின் மீது அமர்ந்திருந்த 10-க்கும் மேற்பட்டோர் சிக்கி, 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மற்றும் காவல் கண்காணிப்பாளர் சிவராமன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: News18