ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த 7 பேர் கைது

ஜம்மு - காஷ்மீரில், பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வாட்-உல்-ஹிந்த் இயக்கங்களைச் சேர்ந்த 2 மருத்துவர்கள் உட்பட 7 பேர் வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்ததாகக் கூறி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது உபா சட்டம் உட்பட 15 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சோதனையின் போது 2,900 கிலோ வெடிபொருள்கள், ஆயுதங்கள், கை துப்பாக்கிகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி