2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் பலி

குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தின் பார்டோலி நகர் யுவா என்ற கிராமத்தில் இருந்த தேசிய நெடுஞ்சாலையில் சூரத்தில் இருந்து துலேவுக்கு மகாராஷ்டிர மாநில அரசு பேருந்து சென்றுள்ளது. அதே சமயம் சாலிஸ்கயோனில் இருந்து சூரத்திற்கு மற்றொரு பேருந்து சென்றுள்ளது. அப்போது திடீரென ஒரு பேருந்து டிராக்டர் மீது மோதியதால் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை தாண்டி மறுபக்கத்தில் வந்த பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி