மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட 7 கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த 7 கச்சா எண்ணெய் கப்பல்களும் வரும் சனிக்கிழமை கர்நாடகாவின் மங்களூரு துறைமுகத்திற்கு வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.