நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அசல் தங்க நகைகள் எனக் கூறி அடகு வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். போலி நகைகளை அடகு வைத்து கிடைத்த பணத்தில் ஆடம்பரமாகச் செலவு செய்ததுடன், கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளுடன் வீடியோ போட்டுள்ளனர். இதுகுறித்து கிடைத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், மோசடியில் தொடர்புடைய 7 பேரையும் கைது செய்தனர்.
நன்றி: பாலிமர்