மலேசியாவின் போர்னியோ தீவு பகுதியில் இன்று (பிப்.23) அதிகாலை 12.57 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகுகளாக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர பகுதியில் சுமார் 619.8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் நிலப்பரப்பிற்கு அடியில் மிக ஆழத்தில் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பதுடன் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படவில்லை.