தமிழ்நாட்டில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.5, ரூ.10 வசூலித்ததாக புகார் எழுந்த நிலையில், 67 டாஸ்மாக் ஊழியர்கள் ஒரே நாளில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுபாட்டில்களுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதைத் தடுக்க அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.