தட்கல் டிக்கெட் முறைகேட்டில் 65 ரயில்வே ஊழியர்கள் கைது

ரயில்வேயில் தட்கல் டிக்கெட் முன்பதிவு முறைகேடுகள் தொடர்பாக 2023 முதல் 2026 ஜூன் வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், 65 ரயில்வே ஊழியர்கள் மற்றும் 13,580 டிக்கெட் இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே சட்டம் 1989-இன் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தட்கல் முறைகேடுகளை தடுக்க நாடு முழுவதும் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி