இந்திய இளைஞர்கள் மத்தியில் தங்கம் முதன்மையான முதலீடாகத் திகழ்வது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 18-39 வயதுடைய 5,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 62% பேர் தங்கத்தை சிறந்த முதலீடாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். பரஸ்பர நிதிகள் (16.6%), நிலையான வைப்புத்தொகை (13%), பங்குகள் (6.6%) மற்றும் கிரிப்டோகரன்சி (1.9%) ஆகியவற்றை விட தங்கம் முன்னிலை வகிக்கிறது. பொருளாதார நிச்சயமற்ற காலங்களில், 65.7% பேர் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதுகின்றனர். தற்போது ஒரு சவரன் ரூ.116,000-க்கு விற்கப்படுகிறது.