ஹாங்காங் சிக்ஸஸ் போட்டி இன்று (நவ.7) பாகிஸ்தான் - குவைத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் வீரர் அப்பாஸ் அப்ரிடி சாதனை படைத்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் யாசின் படேல் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 6 ஓவர்கள் கொண்ட போட்டியில் குவைத்துக்கு எதிராக 124 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய அப்பாஸ் அப்ரிடி, 12 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் மொத்தம் 55 ரன்கள் எடுத்தார். இறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றது.
நன்றி: ICCAsiaCricket