கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள பீமா ஆற்றங்கரையில் நாட்டையே உலுக்கும் பயங்கரம் நடந்துள்ளது. கோவிந்தபுரா கிராமத்தில் 6 பேர் இன்று (மே 29) சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் ரேவனசித்தப்பா நிராலே, துண்டப்பா நிராலே, சந்திரசேகர் நிராலே, ஷபீர் மற்றும் நதாஃப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நிராலே மற்றும் கோல்கி குடும்பங்களுக்கு இடையேயான நிலத்தகராறே இந்தக் கொடூரத்துக்கு காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.