உத்தரப் பிரதேச மாநிலம் பானிபட்-கதிமா தேசிய நெடுஞ்சாலையில் ஜகஹேரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மின்சார கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்த விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர். இவர்கள் பயணித்த காரில் திடீரென பற்றி எரிந்த தீயால் காரை விட்டு வெளியேற முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலிசார், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.