தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட 6 பேர் கைது

திருப்பூரில் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். திருப்பூரில் முகாமிட்டுள்ள டெல்லி காவல் துறையினர் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊத்துக்குளியில் 2, பல்லடத்தில் 3, திருமுருகன்பூண்டியில் ஒருவர் என 6 பேரை டெல்லி காவல்துறை கைது செய்து அவர்களின் திட்டம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே டெல்லி செங்கோட்டை பகுதிகயில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி