மகாராஷ்டிரா: புனேவில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததில் 6 உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், இந்திரயானி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்தது. இக்கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலாப்பயணிகளை மீட்டு வருகின்றனர்.
நன்றி: PTI