கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் ஜீப்பும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர். தார்வாடிலிருந்து தர்மஸ்தலா மற்றும் சிக்கமகளூரு ஆகிய இடங்களுக்குச் சுற்றுலாச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது. அதிகாலை 1:30 மணியளவில் ஜீப் ஓட்டுநர் அதிவேகமாக ஓட்டியதால், எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.